தூங்காநகரம் என்றும், தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரம் என்றும் போற்றப்படும் மதுரையின் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புகளை உலகறியச் செய்யும் நோக்கில் இன்று பாரம்பரிய நடைப்பயணம் நடைபெற்றது.


மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மதுரையின் கலை மற்றும் கலாச்சாரத்தின் மீது கொண்டுள்ள மிகுந்த அக்கறையுடன் இந்த நடைப்பயணத்தில் முன்னின்று பங்கேற்றார். திருமலை நாயக்கர் அரண்மனை முதல் மீனாட்சி அம்மன் கோயில் வரை 12 முக்கிய இடங்களை நேரில் பார்வையிட்ட ஆட்சியர், மதுரையின் பெருமைமிகு சின்னங்களை உரிய முறையில் ஆவணப்படுத்தி, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


இந்த வரலாற்றுப் பயணத்தில் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி ஆகியோர் உடனிருந்தனர். சுற்றுலாப் பயணிகளுக்காக தகவல் பலகைகள் அமைப்பது முதல் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது வரை ஆட்சியர் வழங்கிய ஆலோசனைகள் மதுரையின் சுற்றுலாத் துறைக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.


பார்வையிட்ட இடங்கள்








இந்த நடைப்பயணத்தில்


1. திருமலை நாயக்கர் அரண்மனை


2. சேதுபதி மருத்துவமனை (பாண்டியன் கூட்டுறவு அங்காடி)


3. பத்துத்தூண் சந்து


4. விளக்குத்தூண் (Light House)


5. கொத்தவால் சாவடி (Police Main Guard)


6. திருக்கோயில் தேர்கள்


7. எழுகடல் வீதி


8. இராய கோபுரம்


9. புதுமண்டபம்


10. விட்டவாசல்


11. நகரமண்டபம் (அச்சுராயன் மண்டபம்)


12. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்


உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.