சூரி ஹீரோவாக நடிக்கும் படம் மண்டாடி. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படம், படகு பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட்குமார் தயாரிக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கோடையில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இதன் படப்பிடிப்பில் கடலில் படகின் மீது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள சூரி, ரத்தம், வியர்வை, தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் ஒரு பயணம் என்று மண்டாடி படத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.