புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தொண்டைமான் ஊரணி ஊராட்சியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா புதிய நியாய விலைக் கடையை அமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார்.
புதுக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் நியாய விலைக் கடை வசதி வேண்டி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தொகுதி மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து விரைந்து செயல்பட்டு இத்திட்டத்தை அவர் சாத்தியமாக்கியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று பொதுமக்களின் வசதிக்காக புதிய நியாய விலைக் கடைகள் விரைவாக அமைக்கப்படும் என்று கடந்த திமுக ஆட்சியில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் உறுதியளித்திருந்ததைத் தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட இக்கடை, டாக்டர் வை. முத்துராஜா அவர்களின் தீவிர முன்னெடுப்பால் இக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சிரமமின்றிச் சென்று சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொகுதி மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு களத்தில் நின்று செயலாற்றி வரும் புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா அவர்களின் இந்த மக்கள் சேவையைப் பாராட்டி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.