அரபிக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலை நோக்கி அச்சுறுத்தும் வகையில் சென்ற ஈரானின் டிரோனை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளது.
ஈரான் எல்லையில் இருந்து சுமார் 800 கி.மீ. தொலைவில் அமெரிக்க கப்பல் இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது என்றும் கப்பலில் இருந்து ஏவப்பட்ட அதிநவீன அப். 35 சி போர் விமானம் அந்த டிரோனை நடுவானிலையே சுட்டு வீழ்த்தியது என்றும் இந்த சம்பவத்தில் அமெரிக்க வீரர்கள் யாருக்கும் காயமோ அல்லது உபகரணங்களுக்கு சேதமோ ஏற்படவில்லை என்றும் பென்டகன் உறுதிப்படுத்தி உள்ளது.