2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். 2027 நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்று அதில் கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக நிதி அமைச்சகம் சார்பில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில், 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, பொருளாதார ஆய்வறிக்கையின் நகல், அனைத்து உறுப்பினர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பப்படும் என கூறினார்.

பொருளாதார ஆய்வறிக்கையில், உலகப் பொருளாதார நிலைமைகள் நிச்சயமற்றதாகவும் நிலையற்றதாகவும் உள்ளது. என்ற போதிலும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை தொடர்ந்து நேர்மறையாகவே உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளால் அபாயங்கள் அதிகமாக இருந்தாலும், பல நாடுகளின் பொருளாதாரங்களோடு ஒப்பிடும்போது இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது.

எனவே, 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்றும், 2027-28 நிதி ஆண்டில் இது 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.