பொங்கல் பண்டிகை நாளை வியாழக் கிழமை கொண்டாடப்படுகிறது. மறுநாள் 16-ம் தேதி மாட்டுப்பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது பொங்கலையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்கிகள் 4 நாட்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 15-ம் தேதி பொங்கல் முதல் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் தனியார் வங்கிகளும் செயல்படாது. வங்கிகள் 4 நாட்கள் மூடப்படுவதால் சேவைகள் கடுமையாக பாதிக்கக்கூடும். பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை பல ஆயிரம் கோடி நடைபெறாமல் முடங்கும்.

இன்று புதன் கிழமை மட்டுமே வங்கி செயல்படும் என்பதால் வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள் தங்களுடைய வங்கி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றனர். பண்டிகை கால பணத் தேவையை சமாளிக்க அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் பணம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அவற்றை கண்காணித்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணத்தை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.