விருதுநகர், அக். 8-

புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்கதர்க

ளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் மிகவும் புகழ் வாய்ந்த சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வழிபட தமிழ

கத்தின் பல்வேறு பகுதிக

ளில் இருந்து மக்கள் வருகி

ன்றனர். சதுரகிரி மலை சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப் படுகிறது. இந்த மலைக்கு செல்ல அனைத்து நாட்களிலும் அனுமதி வழங்கப்படாது.

அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

அதிலும் குறிப்பாக ஆடி, தை, புரட்டாசி மகாளய அமாவாசை அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வருவார்கள்.

இந்த ஆண்டு புரட்டாசி மகாளய அமாவாசை வரும் அக்டோபர் 10ம் தேதி வருகிறது. எனவே இதனை முன்னிட்டு, பக்தர்கள் இன்று (அக்.8) முதல் 11ஆம் தேதி வரை சதுரகிரி மலை

யேறி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

மகாளய அமாவாசை என்பதால் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.