கோவை, அக். 8-
மகளிருக்கான ‘வெற்றிப் பயணம்’ திட்டம் குறித்துப் பலரிடையே குழப்பம் நிலவி வருகிறது. அதாவது, அரசுப் விரைவுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் தவிர்த்து, மொஃபசல், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் மற்றும் சாதாரண பேருந்துகள் என அனைத்து வகையான அரசுப் பேருந்து
களிலும் இலவசமாகப் பயணிக்கலாம் என்று மக்கள் நம்புகிறார்கள்.
பொதுமக்கள் நினைப்பதில் பாதி மட்டுமே உண்மை; அவர்கள் புரிந்து கொண்ட பல விஷயங்கள் தவறானவை என்பதும் தற்போது தெரியவந்து
ள்ளது.
இப்பயணத் திட்டம் குறித்த குழப்பங்களுக்குக் கோவையைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் அளித்த தெளிவான விளக்கம் வருமாறு: “நமது அரசு மக்களுக்காக ஒரு சிறந்த திட்டத்தை அறிவித்து
ள்ளது. ஆனால், திட்டம் குறித்து முழுமையாகத் தெரியாமல் பல பேருந்து
களில் நடத்துநர்களிடம் பயணிகள் தேவையின்றி வாக்குவாதம் செய்கி
றார்கள். நாம் முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நகரப் பேருந்து என்பது ஊருக்குள் செல்லும் பேருந்து; புறநகர்ப் பேருந்து என்பது ஒரு மாவட்டத்தி
லிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்லும் பேருந்தாகும்.
இப்போது நகரப் பேருந்துகள் அனைத்திலும் மகளிர் கட்டணமின்றிப் பயணிக்கலாம். அதாவது எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் என எதுவாக இருந்தாலும் நகரப் பேருந்து என்றால் இலவசம். அந்த இலவசப் பயணத்தை உறுதி செய்ய, அப்பேருந்துகளில் கண்டிப்பாக ‘வெற்றிப் பயணம்’ என்று ஒட்டப்பட்டி
ருக்கும்.
புறநகர்ப் பேருந்துகளைப் பொறுத்தவரை, ‘சாதாரண கட்டணப் பேருந்து’ என்றும், ‘வெற்றிப் பயணம்’ என்றும் பலகை வைக்கப்ப
ட்டுள்ள பேருந்துகளில் மட்டுமே மகளிர் கட்டண
மின்றி பயணிக்க முடியும்.
ஆனால் பொதுமக்கள், அரசு இலவசம் என்று அறிவித்துவிட்டதால் அனைத்துப் பேருந்து
களிலும் ஏறிக் கொண்டு, ‘ஏன் எங்களுக்கு இலவச டிக்கெட் தர மறுக்கிறீர்கள்?’ என்று ஆதங்கப்படுகி
றார்கள். அரசு அறிவித்த சலுகையை மக்களுக்குத் தராமல் விடுவதால் நடத்துநர்களுக்கு எந்த லாபமும் இல்லை. எனவே, இத்திட்டத்தை மக்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்பெல்லாம் நகரப் பேருந்துகளில் சாதாரண கட்டணப் பேருந்துகளுக்கு மட்டுமே இலவசம் அனுமதிக்கப்பட்டது; எல்.எஸ்.எஸ் அல்லது டீலக்ஸ் பேருந்துகளில் அனுமதி கிடையாது. ஆனால் இப்போது, நகரப் பேருந்துகள் அனைத்திலும் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம்.