புதுச்சேரி: புதுச்சேரியில் 3வது உலகத் திரைப்பட விழா நாளை தொடங்குகிறது. இதில் 10 நாடுகளைச் சேர்ந்த பத்து மொழி படங்களை இலவசமாக பார்க்கலாம்.
புதுவை திரை இயக்கம், அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் நிறுவனத்துடன் இணைந்து 3வது உலக திரைப்பட விழாவை நடத்துகிறது. அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் கருத்தரங்கு கூடத்தில் நாளை தொடங்கி 9-ம் தேதி வரை 3 நாட்கள் திரைப்பட விழா நடக்கிறது. நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடக்கவிழா நடக்கிறது. திரைப்படவிழா தொடர்பாக புதுச்சேரி திரை இயக்க செயலர் ரவிசந்திரன் கூறியதாவது: தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் நாளை மாலை விழாவை அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் திரை அரங்கில் தொடங்கி வைக்கிறார். விழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, கொலம்பியா, இலங்கை, இந்தியா, ஈரான், துனிசியா, தென்கொரியா, சீனா நாடுகளை சேர்ந்த 10 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.