இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான பி.டி. உஷாவின் கணவர் வி. ஸ்ரீனிவாசன் நேற்று அதிகாலையில் காலமானார். சி.ஐ.எஸ்.எப். இன்ஸ்பெக்டரான அவர், நேற்று முன்தினம் இரவு கேரளாவின் திக்கோடி உள்ள வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது மறைவை அறிந்த பி.டி. உஷா டெல்லியில் இருந்து கேரளா விரைந்துள்ளார்.

அவரது மறைவுக்கு விளையாட்டு வீரர்களும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீனிவாசன், ஓய்வு பெறுவதற்கு முன்பு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றினார். 1991-ம் ஆண்டு, அவர் தனது தூரத்து உறவினரான பி.டி. உஷாவை மணந்தார். இந்த தம்பதியருக்கு டாக்டர் உஜ்வால் விக்னேஷ் என்ற ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.