பிரபல நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தனுஷ் கடந்த ஆண்டில் குபேரா படத்திலும், இட்லி கடை படத்தை இயக்கியும் நடித்திருந்தார். இந்தியில் தேரே இஷ்க் படத்தில் நடித்திருந்தார். தென்னிந்திய மற்றும் இந்தித் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மிருணாள் தாகூர். மிருணாள் தாகூரும், தனுஷூம் இணைந்து இதுவரை எந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும், இருவருக்கிடையே கிசு கிசுக்கள் மட்டும் உலா வருகிறது.

சன் ஆப் சர்தார் 2 பட விழாவில் தனுஷ் கலந்து கொண்டதும், அங்கு இருவரும் நெருக்கமாகப் பேசிப் பழகிய வீடியோக்களுமே இந்த வதந்திகள் பரவ முக்கியக் காரணமாக அமைந்தன. இந்நிலையில், தனுஷ்- மிருணாள் தாகூர் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டேட்டிங்கில் இருக்கும் இருவரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் ஏற்கனவே ரஜினி காந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து, 18 ஆண்டுகள் கழித்து விவாரகத்து செய்தார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தனுஷ் மிருணா தாகூரை, தனுஷ் 2-வதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.