மதுரை, அக். 7-

வெற்றி பயணம்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்த

ப்பட்ட புதிய பேருந்து, இயக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பழுதாகி நடுரோட்டில் நின்ற சம்பவம் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து புதுக்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ‘வெற்றி பயணம்’ பேருந்து, பி.பி சாவடி அருகே திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை செக்கானூரணி பணினையை சேர்ந்த ‘வெற்றி பயண’ பேருந்து, பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு புதுக்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. காளவாசலில் இருந்து பி.பி சாவடி வழியாகச் சென்ற போது, பேருந்தில் திடீரென பழுது ஏற்பட்டது.

இதனால் பேருந்தை தொடர்ந்து இயக்க முடியாமல் சாலையின் நடுவிலேயே ஓட்டுநர் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பேருந்து சாலையில் நின்றதால் காளவாசல் பகுதி வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேலாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள், பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பேருந்தை கைகளால் தள்ளி சாலை ஓரத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பின்னரே சாலையில் போக்குவரத்து நெரிசல் படிப்படியாகக் குறைந்தது.

‘வெற்றி பயணம்’ என்ற பெயரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பேருந்து, இயக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பழுதாகி நடு ரோட்டில் நின்ற சம்பவம் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி

யுள்ளது. பேருந்தில் பயணம் செய்தவர்களும் இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

புதிய பேருந்துகள் இயக்கப்படுவதற்கு முன்பாக அவற்றின் என்ஜின், பிரேக் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளதா? என்பதையும், வழக்கமான பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ள

ப்பட்டுள்ளதா? என்பதையும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மதுரை மாநகரின் முக்கிய சாலைகளில் பொது போக்குவரத்து வாகனம் பழுதாகி நடு சாலையில் நிற்கும் சூழ்நிலை மீண்டும் ஏற்படாத வகையில், பேருந்துகளை இயக்குவதற்கு முன்பான தொழில்நுட்ப ஆய்வை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழககத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.