2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது அதன் 2- வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ரக்சனா இந்துசூடன் திரௌபதி தேவியாக நடித்துள்ளார். சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 23-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய பாடல் தராசுகி ராம் புரோமோ வெளியாகி இருக்கிறது.
திரௌபதி 2 படத்தின் புதிய பாடலின் புரோமோ வெளியீடு
January 07, 2026
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Latest Posts
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழகம்