திருப்பரங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அமைச்சரவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழக முதல்வர் துறை ரீதியாக கடந்த காலங்களில் நடைபெற்ற நிர்வாக சீர்கேடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அது தொடர்பான பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் அந்தந்த துறை அமைச்சர்கள் அவர்கள் துறை சார்ந்த இடங்களுக்கு சென்றுதிடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் திருப்பரங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் திருப்பரங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் அலுவலர்களுக்கு வேண்டிய வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் இந்த பத்திரபதிவு அலுவலகத்திற்கு உட்பட்ட உட்பிரிவு கிராமங்கள் குறித்தும் விசாரித்து சென்றார். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திடீரென ஆய்வு மேற்கொண்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆய்வின்போது சார் பதிவாளர் ஆஷா, தலைமை எழுத்தர் முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.