டெல்லி, செப். 26-
எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்துள்ள புகார் தேசிய அரசியலை அதிர வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் 2 ஆணையர்களே எஸ்ஐஆர் பணிகளில் மோசடி நடைபெற்றதாக போர் கொடி தூக்கியுள்ளனர்.
எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை தீவிரமாக எதிர்த்து போராடுகின்றன. காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் கண்டன பேரணி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு நோட்டீஸ் விநியோகிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முன்னதாக பீகார் மாநிலத்திலும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் சிறப்பு சீர்திருத்தமான எஸ்ஐஆர் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர். தற்போது தேர்தல் ஆணையத்தி
ற்குள்ளேயும் இது புகைச்சலை ஏற்படுத்தி
யுள்ளது.
தேர்தல் ஆணையர்க
ளாக உள்ள சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி எஸ்ஐஆர் குளறுபடி குறித்து ஆட்சேபனை தெரிவித்தனர். கடந்த 10 மாதங்களில் 14 முறை எழுத்து பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய வாக்காளர் இணைப்பு, பழைய வாக்காளர்களை நீக்குதல், மேல்முறையீடு, ஷாப்ட்வேர், பார்ம் 6 திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அந்த புகாரை பொருட்படுத்தவில்லை.
இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணைய செயல்பாட்டில் மத்திய பாஜக அரசின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. “இந்திய தேர்தல் முடிவுகள் திருத்தப்பட்டுள்ளது. பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பது எப்படி. மோடியும், அமித்ஷாவும் சதி செய்துள்ளனர். ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். அவரை அரசுத்தரப்பு சாட்சியாக சேர்க்க வேண்டும் “என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
“ஞானேஷ் குமார் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும்” என்று கரப்பான் பூச்சி ஜனதாதளம் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அரசு அமைப்புகளில் ஒரு அதிகாரபூர்வ விவாதங்களில் மாறுபட்ட கருத்து எழுவது இயல்பானது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் முழு சட்ட அங்கீகாரம் கொண்டவை என்று கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விளக்கம் ஏற்கும்படி இல்லை என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், ஞானேஷ்குமாரை பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான பணிகளை இந்தியா கூட்டணி மேற்கொண்டுள்ளது. இரு அவைகளில் தீர்மானம் நிறைவேற்றி, ஞானேஷ்குமாருக்கு மீண்டும் நோட்டீஸ் விநியோகிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்கான சட்ட ஆலோசனையும் பெற்ப்பட்டு வருகிறது. இது ஞானேஷ் குமார் பதவி விலக எதிர்க்கட்சிகள் விநியோகிக்கும் மூன்றாவது நோட்டீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.