இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை, பொது நிகழ்ச்சி ஒன்றில் ஐ.சி.சி சேர்மன் ஜெய் ஷா கேப்டன் என்று அழைத்ததும், ரோஹித் சர்மா முகத்தில் வெளிப்பட்ட மகிழ்ச்சியான ரியாக்சன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற யுனைடெட் இன் ட்ரையம்ப் என்ற நிகழ்ச்சியில், ஐ.சி.சி. சேர்மனும், முன்னாள் பி.சி.சி.ஐ. செயலாளருமான ஜெய் ஷா கலந்து கொண்டு பேசினார். அந்த மேடையில் ரோகித் சர்மாவும் அமர்ந்திருந்தார்.

அப்போது பேசிய ஜெய் ஷா, நமது கேப்டன் இங்கே அமர்ந்திருக்கிறார். நான் அவரை இப்போதும் கேப்டன் என்றுதான் அழைப்பேன். ஏனென்றால் அவர் இந்திய அணிக்கு இரண்டு ஐ.சி.சி. கோப்பைகளைப் பெற்றுத் தந்துள்ளார் என்று 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளை குறிப்பிட்டு பெருமிதத்துடன் கூறினார். ஜெய் ஷா இப்படிச் சொன்னவுடன், ரோகித் சர்மா வெட்கத்துடன் கூடிய புன்னகையை வெளிப்படுத்தினார். இந்த வீடியோதான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

தற்போது கேப்டனாக இல்லாவிட்டாலும், இந்திய கிரிக்கெட்டின் நிரந்தர கேப்டன் தான்தான் என்பதை ஜெய் ஷாவின் வார்த்தைகளும், ரோகித்தின் புன்னகையும் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளது.