சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரசுப் பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், சக மாணவர் ஒருவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களிடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் மற்றும் தகராறு முற்றியதே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இளையான்குடி சாலைகிராமம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து மோதிக்கொண்ட கத்தியால் கீறப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களிடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் மற்றும் தகராறு முற்றியதே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. வாக்குவாதத்தின் உச்சக்கட்டமாக, ஒரு மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக மாணவரை தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து சாலைக்கிராமம் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட காரணம் என்ன? கத்தி எவ்வாறு பள்ளிக்குள் கொண்டுவரப்பட்டது மேலும் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசரனை மேற்கொண்டனர்.