அமெரிக்காவின் சைபர் செக்யூரிட்டி அன்ட் இன்பிராஸ்டிரக்கசர் செக்யூரிட்டி (சி.ஐ.எஸ்.ஏ) எனப்படும் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்புப் பிரிவின் செயல் இயக்குநராக மது கோட்டுமுக்கலா என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சி.ஐ.எஸ்.ஏ.-வின் செயல் தலைவராக அதிபர் டிரம்ப் நியமித்தார்.
இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாட்.ஜி.பி.டி.யில் அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்கள், கோப்புகளை மது கோட்டுமுக்கலா பதிவேற்றம் செய்துள்ளார். இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சி.ஐ.எஸ்.ஏ.விலிருந்து அரசாங்க குறிப்புகள், கோப்புகள் யாவும் வெளியே செல்லமுடியாதபடி சைபர் செக்யூரிட்டி தளம் செயல்படுகிறது. இருந்தபோதும் பொதுவெளியில் பயன்படுத்தப்படும் சாட்ஜிபிடி-யில் முக்கிய கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளது தவறு என்று பொலிட்டிகோ ஊடக நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.