கூட்டணியில் இணைப்பது குறித்து தேவைப்பட்டால் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திடம் பேசுவேன் என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லையில் நேற்று செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,
நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம் வருவார்கள். ஓ.பி.எஸ் நல்லவர்தான். கூட்டணி குறித்து இதுவரையில் நான் அவரிடம் பேசவில்லை, தேவைப்பட்டால் கண்டிப்பாக பேசுவேன். 2001, 2006, 2011, 2016, 2021 தேர்தல்களில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறேன். திருநெல்வேலி தொகுதி மக்கள் என் உடன்பிறந்த சகோதரர்கள்போல. என்னை அவர்களின் வீட்டில் ஒரு பிள்ளைபோல பார்க்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஒருவர் என்ற உணர்வுடனே பார்க்கிறார்கள். திருநெல்வேலி தொகுதியையும் என்னையும் எப்போதும் பிரித்துப் பார்க்க முடியாது. மேற்குறிப்பிட்ட பட்டியலில் 2026 தேர்தலும் இடம்பெறும் என்றார்.