பெங்களூருவில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து தமிழக தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த முதல்வர் டி.கே. சிவகுமார், “ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது. ஓ. பன்னீர்செல்வம் அல்லது வேறு யாராக இருந்தாலும் இந்த அடிப்படைப் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் என்னால் தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கே உரிய பிரச்சினைகள் உள்ளன. நமது மாநிலத்தை எப்படிக் காப்பது என்பது நமக்குத் தெரியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும், நாம் நமது பணியைச் செய்வோம். அவர்களின் நிர்வாகத்தில் தலையிட நான் விரும்பவில்லை. நமது மாநிலத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டியது அவசியம். அவர்கள் தங்கள் பணியைச் செய்ய வேண்டும்; நாம் நமது பணியைச் செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.