மதுரை, அக்.2-

கடந்த 5 ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவற்றின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நேற்று உத்தரவிட்டது.

கடந்த 5 ஆண்டுக

ளில் நடத்தப்பட்ட சோதனைகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவற்றின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கலா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சாா் பதிவாளராக நான் கடந்த 2021-ஆம் ஆண்டு பணியிலிருந்த போது, ரூ. 45 ஆயிரம் வைத்திருந்ததாக என் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, எனக்கு எதிரான இந்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், அரசுப் பணியாளா்கள் பணியிலிருக்கும் போது எவ்வளவு பணம் வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து அரசு கொள்கை ரீதியான முடிவு எடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க வேண்டும் என உத்தர

விட்டது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் இந்த மனு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில முன்னிலையான கூடுதல் தலைமை வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

அரசுப் பணியாளா்கள் பணியிலிருக்கும்போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது குறித்து அனைத்துத் துறைகளுடனும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடமிருந்து நீதிமன்றம் சில விவரங்களைப் பெற விரும்புகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நடத்தப்பட்ட திடீா் சோதனைகள், எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது, இந்தச் சோதனைகள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய நிலை, வழக்கு தொடா்வதற்குப் பதிலாக வேறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அவற்றின் விவரங்கள், தற்போதைய நிலை குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு (அக். 1) ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.