பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா, நேற்று காலமானார். அவர் ஐதராபாத்தில் தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், உடல்நல கோளாறு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவு திரையுலகத்தையும், இசை ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

முரளி கிருஷ்ணா, புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் ஒரே மகன். திரையுலகப் பின்னணியில் வளர்ந்தாலும், அவர் விளம்பர வாழ்க்கையைத் தவிர்த்து, நடிப்பு மற்றும் கலை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்தார். சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடனங்களில் தேர்ச்சி பெற்ற நடன கலைஞராக உள்ளார்.

ஆனாலும் அவருடைய மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். அதுபோல தனது குழந்தைகளுக்கும் திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டு தன்னுடைய அம்மாவுடன் வசித்து வந்தார். பிரபலமான தாயின் மகனாக இருந்தாலும், அதிக வெளிச்சம் வேண்டாம் என்ற மனநிலையுடன், அமைதியான வாழ்க்கையையே முரளி கிருஷ்ணா தேர்ந்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.