2026-ம் ஆண்டிற்கான 98-வது ஆஸ்கார் விருதுவிழா மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்நிலையில், விருதுகளுக்கான தகுதியுடைய 201 திரைப்படங்களின் பட்டியலை ஆஸ்கார் அகாடமி வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப்பட்டியலில் சிறந்த திரைப்படப் பிரிவில் தமிழில் இருந்து சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி தேர்வாகியுள்ளது.
இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வரும் 22-ம் தேதி அன்று வெளியாகும். இந்நிலையில், ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றதற்காக அனைவர்க்கும் நன்றி என தனது டுவிட்டர் பக்கத்தில் சசிகுமார் பதிவிட்டுள்ளார்.