சென்னை, செப். 22-

திமுக ஆட்சியில் மட்டும் ஊழலே நடக்கலையா? என்று கம்யூனிஸ்ட் கட்சிகளை பார்த்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மாநில செயலாளர் பெ.சண்முகம், ஆட்சியில் நீங்கள்தானே இருக்கிறீர்கள்.. நடவடிக்கை எடுங்கள் என்று கூறியிருக்கிறார். சண்முகத்தின் பேச்சு தவெக கூட்டணிக்குள் குழப்பத்தை அதிகரித்திருக்கிறது. எனவே விரைவில் கூட்டணி உடையுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது, “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள்தான் இருக்கிறார்கள்.

ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும்.. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லா ஆட்சிக்காலத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழிந்து வந்திருக்கிறது. இப்போதும் நான் அவர்களுக்கு சொல்லக்கூடியது இதுதான். முதலமைச்சர் தன் டேபிள் மீது 3 கோப்புகள் இருப்பதாகவும் அதை எப்போது வேண்டுமானாலும் திறப்பேன் என்று நீண்டகாலமாக கூறி வருகிறார்.

ஆட்சி அமைத்து 4 மாதங்கள் ஆகிவிட்டன.. எனவே அவர்கள் கையில் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் ஊழல் முறைகேடுகள் நடந்திருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர்கள் எங்களை பார்த்து கேள்வி எழுப்புவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஆதவ் அர்ஜுனா சார்பில் நான் வழிமொழிகிறேன்.

எல்லா ஆட்சிக்கால

த்திலும் நாங்கள் ஆதரவு, எதிர்ப்பு என்கிற இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருக்கிறோம். மக்களுக்கு சாதகமான திட்டங்கள் கொண்டுவரப்படும்போது அதை நாங்கள் மனப்பூர்வ

மாக வரவேற்றிருக்கிறோம். அதுவே எதிரான திட்டங்கள் கொண்டுவர

ப்படும்போது நாங்கள் எதிர்த்திருக்கிறோம். இதுதான் எங்கள் அணுகுமுறை. இது தெரியாத

வர்கள்தான் எங்கள் மீதான விமர்சனங்களை அடுக்குகிறார்கள். அவர்கள் திட்டுகிறார்கள் என்பதால் எங்கள் அணுகுமுறையை நாங்கள் மாற்றிக்கொள்ள மாட்டோம். ஆதரவு, எதிர்ப்பு, இடித்துரைப்பது, எடுத்துரைப்பது எல்லாம் தொடரும்” என்று பேசி

யிருக்கிறார்.

தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு சிபிஎம் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில்.. அதாவது அமைச்சரவையில் பங்கெடுக்காமல் தள்ளியே நிற்கிறது. இப்படி இருக்கை

யில், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து.. தவெகவில் இணைந்ததையும் சிபிஎம் கடுமையாக எதிர்த்திருக்கிறது. எனவே தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இது தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

வழக்கமாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகள்தான் ஜெயிக்கும். அந்த வகையில் இந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேல்தான் வெற்றி பெறுவார்கள் என்று கட்சி நம்பியிருக்கிறது. இந்த வெற்றி பாதிக்கப்படுகிறது எனில், அதற்கு முதல் காரணம் கம்யூனிஸ்ட்டு

களாகத்தான் இருப்பார்கள்.

எதிர்க்கட்சி தரப்பில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. திமுக ஷார்ப்பாக இறங்கியிருக்கிறது. அதிமுகவும் அப்படித்தான். ஆனால், தவெக கூட்டணியில்.. உள்ளே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து களம் இறங்கியிருப்பதால், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மக்களிடத்தில் பேசுபொருளாகியி

ருக்கின்றன. எனவே இந்த இடைத்தேர்தலில் தவெக தோற்றால் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான உறவை முறித்துக்கொள்ள அக்கட்சி யோசிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.