சியோல்: வடகொரியா கடலை நோக்கி குறுகிய தூரம் பாயும் அணுஆயுத ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா தென்கொரியா நாடுகளிடையேயான நீண்டநாள் மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக குறுகிய ஏவுகணை சோதனை, கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்டதூர ஏவுகணை சோதனை, நீருக்கடியில் கதிரியக்க சுனாமிகளை உருவாக்கி அணு ஆயுத இலக்குகளை அழிக்கும் புதிய டிரோன் சோதனை உள்ளிட்டவைகளை செய்து வருகிறது.
அந்த வகையில் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய ராணுவம் கூறுகையில், “வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியான வொன்சான் பகுதியில் இருந்து குறைந்த தூரம் பாயும பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியதை தென்கொரிய கூட்டு படை தலைமை உறுதி செய்துள்ளது” என தெரிவித்துள்ளது.