முன்­னாள் அமைச்­சர் அர.சக்­க­ர­பாணி விடுத்­துள்ள ட்விட்­டர் பதிவு வரு­மாறு:–


விலை­வாசி உயர்­வால் ஏழை எளிய மக்­கள் துன்­பத்­தில் இருக்­கும்­போது, முத­லில் விலை­யேற்­றம் இல்லை என ஆண­வத்­தோடு பேட்டி கொடுத்த நீங்­கள், தி.மு.க. விடுத்த சவா­லுக்குப் பயந்து விலை­யேற்­றம் இருப்­பதை ஒப்­புக்­கொண்­ட­தற்கு நன்றி.


நிர்­வா­கத் திறன் இன்றி இன்­னும் எதிர்க்­கட்­சி­யா­கவே தங்­களை நினைத்து, மற்­ற­வர்­கள் மீது பழி­ போ­டும் அர­சி­யலை முத­லில் நிறுத்­துங்­கள்.


விலை­யேற்­றத்தைத் தடுப்­ப­தும், பதுக்­கலைத் தடுப்­ப­தும் உங்­கள் துறை­யின் வேலைதான் என்­பதை மறந்­து­விட்டு இப்­படி பேட்டி தரு­வ­தற்கு முன், தங்­க­ளின் பணி­கள் என்ன என்­பதை அதி­கா­ரி­க­ளி­டம் ஒரு முறை கேட்டுத் தெரிந்­து ­கொள்­ளுங்­கள்.


பதுக்­கி­ய­வர்­களைக் கண்­டு­பி­டித்து சட்­டத்­தின் முன் நிறுத்­தும் திறமை இந்த அர­சுக்கு இல்­லையா? இல்லை பதுக்­கி­ய­வர்­க­ளோடு டீல் போட்டு அவர்­களைக் காப்­பாற்­று­ கி­றீர்­களா? அல்­லது கற்­பனைக் கதை­களைச் சொல்லி ஒரு யூனிட் மின்­சா­ரத்தை 35 ரூபாய்க்கு வாங்­கும் உங்­கள் மின்­துறை அமைச்­சரைப் போல நீங்­க­ளும் சிறப்­புத்திட்­டங்­கள் வைத்­துள்­ளீர்­களா?


பதுக்­கல் கும்­பல் மீது நட­வ­டிக்கை எடுப்­பதை எது தடுக்­கி­றது?


அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளின் விலை உயர்வை தடுக்­கத் தவ­றிய தாங்­கள், வழக்­கம்­போலConspiracyகதை­கள் மூலம் இதை­யும் மடை­மாற்­றா­மல் ஆக்­கப்­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­யில் இறங்­குங்­கள். இல்­லை­யென்­றால், குரங்கு கையில் பூ மாலை என்­ப­தற்கு இந்த த.வெ.க. அரசே சாட்­சி­யா­கி­வி­டும்.


இவ்­வாறு முன்னாள் அமைச்சர் அர.சக்கர பாணி தெரி­வித்­துள்­ளார்.