மதுரை, அக். 17:
மதுரை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் 2026ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று (17.10.2026) தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் . நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஹாக்கி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை, மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் . எஸ்.ஆர். தங்கப்பாண்டி, மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் . மதார் பதூருதின், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
. எம்.எம். கோபிசன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ம. விஜய், மாநகராட்சி துணை மேயர் . தி. நாகராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான இப்போட்டிகள் மூலம் இளம் ஹாக்கி வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுடன், விளையாட்டுத் துறையில் அவர்களின் முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.