தென்கொரியாவின் முன்னாள் அதிபா் யூன் சுக் யோலின் மனைவி கிம் கியான் ஹீ மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில், அவருக்கு 20 மாத சிறை தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

யூன் சுக் யோல் அதிபராக இருந்த காலகட்டத்தில், அவரது மனைவி கிம் கியான் ஹீ அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, விலையுயா்ந்த வைர நெக்லஸ் மற்றும் ஆடம்பர பைகளை லஞ்சமாகப் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தப் புகாா்கள் நீதிமன்றத்தில் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளன. நாட்டின் முதல் பெண்மணி என்ற கௌரவமான பதவியில் இருந்துகொண்டு, தனது சொந்த லாபத்துக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக நீதிபதிகள் தங்களின் தீா்ப்பில் கிம் கியான் ஹீயைக் கடுமையாக விமா்சித்துள்ளனர்.