விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவித்துள்ளது.
இது குறித்து கே.வி.என் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இந்தத் தகவலை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். இன்று 9-ம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் படத்தின் வெளியீடு, எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்து கொள்கிறோம், மேலும் இந்த முடிவு எங்கள் யாருக்கும் எளிதானதாக இல்லை. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
அதுவரை, உங்கள் பொறுமையையும் அன்பையும் தொடர்ந்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களது அசைக்க முடியாத ஆதரவே எங்களது மிகப்பெரிய பலம் மற்றும் ஒட்டுமொத்த ஜனநாயகன் குழுவினருக்கும் அதுவே எல்லாமும் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.