சென்னை, அக். 15-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை ஒட்டி அக்டோபர் 30ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் பசும்பொன் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பசும்பொன் முத்துராம

லிங்க தேவரின் 119வது பிறந்த நாள் விழா மற்றும் 64வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30ஆம் தேதி (30.10.2026) நடைபெற உள்ளது. இந்நாளையொட்டி தமிழக முதலமைச்சராகப் பதவி வகிப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். அதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னி

ற்குச் சென்று அவரது நினைவிடத்திலும் மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சரான பிறகு முதல்முறையாக அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னிற்குச் சென்று முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் நேரடியாக மரியாதை செலுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசு மற்றும் காவல்துறை தரப்பில் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு தவெக சார்பில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான அமைச்சர் ஆனந்த், முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், அமைச்ச

ர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.