கடந்த 2023-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது. அம்மாநில முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே இழுபறி நிலவியது. இதையடுத்து, முதல்வர் பதவியை ஆட்சிகாலத்தில்
இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் கால இடைவெளியில் பகிர்ந்து முடிவு
செய்யப்பட்டது.
அதன்படி, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். இதனிடையே, கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று கடந்த 20-ம் தேதி இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏற்கனவே முடிவு
செய்யப்பட்டபடி மாநில முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்கலாம் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் பதவியில் யார் வகிப்பது என்பதில் குழப்பம்
ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, டி.கே.சிவக்குமாரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 15-க்கும் மேற்பட்டோர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து டி.கே.
சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில்,
கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று சிக்கபள்ளாப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில்
பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறுகையில்,
முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். நான் முதல்வராக தொடரவேண்டுமென காங்கிரஸ் மேலிடம் முடிவு அதன்படி
முதல்வராக தொடர்வேன். அதேவேளை, காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன். டி.கே.சிவக்குமாரும் காங்கிரஸ் மேலிட மேலிட முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.