ஆப்­பி­ரிக்க நாடான நைஜீ­ரி­யா­வின் நைஜர் மாகா­ணத்­தில் கத்­தோ­லிக்க கிறிஸ்­தவ பள்ளி ஒன்று செயல்­ப­டு­கி­றது. இங்கு 300-க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் பயின்று வரு­கின்­ற­னர். இந்த பள்­ளிக்­குள் துப்­பாக்­கி­யு­டன் ஆயுத கும்­பல் நுழைந்­தது. பின்­னர் துப்­பாக்­கி­மு­னை­யில் 100-க்கும் மேற்­பட்­டோரை கடத்தி சென்­ற­தாக தக­வல் வெளி­யா­னது. தொடர்ந்து நடைபெற்ற விசா­ர­ணை­யில் 303 குழந்­தை­கள் மற்­றும் 12 ஆசி­ரி­யர்­கள் கடத்­தப்­பட்­டது தெரிய வந்­துள்­ளது.

முன்­ன­தாக கடந்த 18-ம் தேதி எர்கு நக­ரில் உள்ள கிறிஸ்­தவ தேவா­ல­யத்­தில் பிரார்த்தனையில் ஈடு­பட்­டி­ருந்த 40 பேரை ஆயு­தக்­கு­ழு­வி­னர் துப்­பாக்கி முனை­யில் கடத்திச் சென்­ற­னர். அதில் 2 பேர் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட நிலை­யில், 38 பேர் விடுவிக்கப்ப ட்­ட­னர். கடந்த 22-ம் தேதி நைஜீ­ரீ­யா­வின் வட­கி­ழக்கு பகு­தி­யில்

ஆயு­தக்­கு­ழு­வி­ன­ரு­டன் நடந்த மோத­லில் 5 பாது­காப்பு படை வீரர்­கள்

சுட்­டுக்­கொ ல்­லப்­பட்­ட­னர்.

இந்த நிலை­யில், பள்­ளிக்­கு­ழந்­தை­கள் மற்­றும் ஆசி­ரி­யர்­கள் கடத்­தப்­பட்ட சம்­ப­வத்­திற்கு எந்த ஆயு­தக்­கு­ழு­வி­ன­ரும் பொறுப்­பேற்­க­வில்லை. அதே சம­யம், கடத்­தப்­பட்­ட­வர்­களை மீட்க தீவிர நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தாக பாது­காப்பு படை தரப்­பில்

தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கி­டை­யில், கடத்­தப்­பட்­ட­வர்­க­ளில் சுமார் 50 குழந்­தை­கள் ஆயு­தக்­கு­ழு­வி­ன­ரின் பிடி­யில் இருந்து தப்பி வந்­துள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்ள

இந்­நி­லை­யில், நைஜீ­ரி­யா­வில் கடத்­தப்­பட்ட பள்­ளிக் குழந்­தை­களை

விடு­விக்க போப் லியோ வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

இது குறித்து அவர் கூறி­யி­ருப்­ப­தா­வது;-

“கடத்­தப்­பட்ட கடத்­தப்­பட்ட குழந்­தை­கள் மற்­றும் அவர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு

ஏற்­பட்­டுள்ள துய­ரம் குறித்து நான் மிகுந்த வேத­னை­ய­டை­கி­றேன். பண­யக்­கை­தி­க­ளாக பிடிக்­கப்­பட்­ட­வ ர்­களை உட­ன­டி­யாக விடு­விக்க வேண்­டும் என்று நான் மன­தார

வேண்­டு­கோள் விடுக்­கி­றேன். மேலும் அவர்­களை உட­ன­டி­யாக மீட்­ப­தற்கு அதி­கா­ரி­கள் தேவை­யான நட­வ­டிக்­கை­களை துரி­த­மாக மேற்­கொள்ள வேண்­டும் என்று

கேட்­டுக்­கொள்­கி­றேன். இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.