தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அது போது மாவட்ட செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.