மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். டிட்வா புயல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 1601 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 582 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தமிழகத்தில் டிட்வா புயல், மழையால் 2.11 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும்.

தூத்துக்குடி, தஞ்சாவூரில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 85,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருக்கும் என்று தற்போதைக்கு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு கணக்கெடுப்பு முடிந்த உடனே நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீர் முழுவதும் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து சரியான கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் தரப்படும். சரியான கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார்.