சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம் சிங்கப்பூரில் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இது 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
சிங்கப்பூர் மிகவும் கடுமையான போதைப்பொருள் தடுப்புச் சட்டங்களைக் கொண்டுள்ளது. 15 கிராம் ஹெராயின் அல்லது 500 கிராம் கஞ்சா போன்ற குறிப்பிடத்தக்க அளவு போதைப்பொருட்களைக் கடத்துபவர்களுக்கு அங்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படுகிறது.