மதுரையில் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடங்கி நடந்து வருகிறது. முதல் சுற்று லீக் போட்டியில், ஜெர்மனி வெற்றி பெற்றது.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடங்கி, டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து உட்பட 12 நாடுகளை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் சுற்று போட்டியில் ஜெர்மனி 4 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2வது ஆட்டத்தில் கனடா, அயர்லாந்து அணிகள் மோதின. இதில் அயர்லாந்து அணி 4- 3 என்றபோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது.