அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தில் ஆப்கானிஸ்தான் இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 காவல்படை 2 காவல்படை வீரர்கள் படுகாயமடைந்தனர். அதில் இரு பெண் வீராங்கனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய மிருகம் பெரிய விலையை கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
மேலும் ஆப்கானிஸ்தான் குடிமக்களின் விசா பரிசீலனையை அமெரிக்கா உடனடியாக நிறுத்தியது. தாக்குதல் தாக்குதல் நடத்திய இளைஞர் கடந்த ஜோ பைடன் ஆட்சியில் 2021-ல் சரியான பரிசோதனை இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்தவர் என டிரம்ப் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்ப அவகாசம் கிடைக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் சமூக வலைதள பதிவில், முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் மில்லியன் கணக்கானோரை அமெரிக்காவுக்குள் அனுமதித்ததை தான் ரிவர்ஸ் செய்ய போவதாக தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவுக்கு பயன்படாதோரும், அமெரிக்காவை நேசிக்க முடியாத அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என சூளுரைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி அமெரிக்கர் அல்லாதோருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகளையும் தான் நிறுத்தப்போவதாக டிரம்ப் உறுதிபட தெரிவித்தார். தற்போதைய மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில், ஆப்கானிஸ்தான், ஈரான், மியான்மர், காங்கோ, கியூபா, எரித்திரியா, ஹெய்டி, வெனிசுலா, சோமாலியா, சூடான் உள்ளிட்ட சில நாடுகள் இடம்பெற்றுள்ளன.