பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டநெரிசலை தவிா்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரத்தில் இருந்து வரும் 12-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து மறுமாா்க்கமாக 19-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தாம்பரம் வந்தடையும். செங்கல்பட்டில் இருந்து 12-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தென்காசி சென்றடையும். தென்காசியில் இருந்து மறுமாா்க்கமாக 19-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் செங்கல்பட்டு வந்தடையும்

சென்னையில் இருந்து வரும் 9-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தென்காசி சென்றடையும். தாம்பரத்தில் இருந்து 14-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்தில் இருந்து மறுமாா்க்கமாக 21-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் தாம்பரம் வந்தடையும். பொத்தனூரில் இருந்து 13-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் செங்கொட்டை சென்றடையும். சென்னையில் இருந்து 13-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் செங்கொட்டை சென்றடையும். சென்னையில் இருந்து 14-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மங்களூரு சென்றடையும்.

சென்னையில் இருந்து 12-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் கோவை சென்றடையும். கோவையில் இருந்து மறுமாா்க்கமாக 19-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் சென்னை வந்தடையும் சென்னையில் இருந்து 14-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் போத்தனூர் சென்றடையும். போத்தனூரில் இருந்து மறுமாா்க்கமாக 21-ம் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் சென்னை வந்தடையும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.