வரும் 31-ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் இணைக்கவில்லை என்றால் உங்களின் பான் செயலிழந்து போய்விடும் என வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பான் கார்டு செயலிழந்து விட்டால் உங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் தொடங்கி அனைத்துமே பாதிக்கப்படும். எனவே உங்களுடைய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விடுவது நல்லது. முதலில் உங்கள் பான் உடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற பக்கத்திற்கு சென்று அதில் quick links என்ற பிரிவின் கீழ் Link aadhaar status என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களின் பான் எண், ஆதார் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். உங்களின் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

ஆதார் , பான் இணைக்கப்படாமல் இருந்தால் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற பக்கத்தில் quick links என்ற பிரிவின் கீழ் Link aadhaar என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய பான் மற்றும் ஆதார் எண்ணை அதில் உள்ளீடு செய்ய வேண்டும். ஒருவேளை உங்களுடைய பான் கார்டு 2017 ஜூலை ஒன்றாம் தேதிக்கு முன்னர் விநியோகம் செய்யப்பட்டிருந்தால் நீங்கள் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியாக வேண்டும்.

எனவே Continue to Pay Through e-Pay Tax என்பதை கிளிக் செய்து பான் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இதனை அடுத்து வரும் ஓடிபி-ஐ உள்ளிட்டு சரிபார்ப்பை முடித்து Income Tax என்பதில் proceed என்பதை கிளிக் செய்து பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய உடன்https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற பக்கத்திற்கே மீண்டும் சென்று லாகின் செய்து link aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஆதார் நம்பரை உள்ளிட்டு validate என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து வரும் ஓ.டி.பி எண்ணை உள்ளிட்டால் பான் ஆதார் இணைப்பு முடிந்து வெற்றிகரமாக இணைக்கப்பட்டது என்ற மெசேஜ் திரையில் காட்டும்.