சென்னை அடையாறு மண்டலத்தில் வார்டு-174க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.78.39 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 பல்நோக்கு மையக் கட்டித்தினையும், உடற் பயிற்சிக் கூடத்தையும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அடையாறு மண்டலத்தில் வார்டு-174க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.78.39 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 பல்நோக்கு மையக் கட்டித்தினையும், உடற் பயிற்சிக் கூடத்தையும் நேற்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெசன்ட் நகர், 6-வது அவன்யூவில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினைத் திறந்து வைத்துப் பார்வையிட்டு, உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்களை பயன்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.