திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. டிசம்பர் 3-ம் தேதி மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று முன்பு காலை சர்வ அலங்காரத்தில் சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். காலை 10:55 மணிக்கு கொடி கம்பத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். டிசம்பர் 4-ம் தேதி வரை தினமும் காலை பல்வேறு வாகனங்களில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா வருவர்.

சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை திருவிழா 6-ம் நாளான வரும் 30-ம் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, டிசம்பர் 1-ல் காலையில் கங்காளநாதர் சுவாமி புறப்பாடு, மாலையில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்பாளும், காமதேனு வாகனத்தில் சுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சியிலும் அருள்பாலிப்பர்.

டிசம்பர் 2-ம் தேதி காலை நடராஜர், சிவகாமி அம்மன் புறப்பாடு, இரவு 7:15 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. டிசம்பர் 3-ம் தேதி காலை தேரோட்டம், மாலையில் மலைமேல் மஹாதீபம் ஏற்றுதல், இரவு சொக்கப்பனை தீபக் காட்சி நடைபெறுகிறது. டிசம்பர் 4-ம் தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.