2 நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதன்கிழமை இரவு டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து, கடந்த 2 நாட்களாக புடின் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி நேற்று முன்தினம் 23-வது இந்தியா - ரஷ்யாருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொண்டனர்.

பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த பயணத்தின்போது இந்தியா இந்தியா , ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் 2 நாட்கள் அரசு பயணத்தை நிறைவு செய்த அதிபர் புடின் நேற்று முன்தினம் இரவு ரஷ்யா புறப்பட்டு சென்றார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அதிபர் புடினை வழி அனுப்பி வைத்தார்.