சென்னை, அக். 16-
சென்னையில் பொதுப்போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 1,000 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய தவெக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான இணைப்புப் போக்குவரத்து சேவையை மேம்படுத்த 220 மின்சாரப் பேருந்துகளை வாங்க வெளியிடப்பட்ட டெண்டரிலும் எந்த நிறுவனமும் ஏலம் கோரவில்லை.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், மொத்தச் செலவு ஒப்பந்த முறையில் 12 மீட்டர் நீளமுள்ள தாழ்தள வசதி கொண்ட 1,000 குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்து, இயக்கி, பராமரிக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக வெளியிடப்பட்ட டெண்டரில், பேருந்துகளுக்குத் தேவையான மின்சார மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக இந்த டெண்டரை ரத்து செய்வதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. எனினும், டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணிகள் தங்கள் பகுதிக
ளுக்குச் செல்வதற்கும், அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையங்களை வந்தடைவதற்கும் வசதியாக 220 மின்சாரப் பேருந்துகளை வாங்கத் திட்டமிடப்பட்டது.
இதில் 7 மீட்டர் நீளமுள்ள 70 பேருந்துகளும், 5 மீட்டர் நீளமுள்ள 150 பேருந்துகளும் அடங்கும். இந்த டெண்டர் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டபோது, எந்த நிறுவனமும் ஏலம் கோரவில்லை என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மின்சாரப் பேருந்து சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதுடன், பொதுமக்க
ளுக்கான போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்த முடியும்.
இத்தகைய சூழலில், 1,000 பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டிருப்பதும், 220 பேருந்துகளுக்கான டெண்டரில் ஏலம் கிடைக்காததும் திட்டங்க
ளைச் செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூ
டும். எனவே, ரத்து செய்யப்பட்ட டெண்டருக்குப் பதிலாகப் புதிய டெண்டர் எப்போது வெளியிடப்படும், ஏலம் கிடைக்காத 220 பேருந்துகளைக் கொள்முதல் செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.