சென்னை, அக். 16-
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் எஸ்ஐஆரால் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்க திமுகவினர் பாடுபட்டதை பாராட்டும் விதமாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் பேசியதை ஒட்டி, வெட்டி போட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் திமுகவிடம் பதிலடியாக வாங்கி கட்டிக் கொண்டார்.
மாணிக்கம் தாகூருக்கு விழுந்த வசவுகளுக்கு ஒத்தடம் கொடுக்க ஓடி வந்திருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக எதையும் செய்யவில்லை, பாஜவுக்கு ஆதரவாக செயல்பட்டது என்றெல்லாம் கதைகளை கட்டவிழ்த்திருக்கிறார்.
எஸ்ஐஆர் முறைக்கு எதிராக திமுக மேற்கொண்ட தொடர் முயற்சிகள், சட்டப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும் சாட்சிகளாக இருந்தவர்கள் இன்றைக்கு தவெக கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் தலைவர்கள் தான். 2025 அக்டோபரில் தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இவ்வளவு பெரிய பணியைச் செய்வது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். பீகார் மாநிலத்தைப் போல லட்சக்கணக்கான உண்மை
யான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்று குற்றம் சாட்டி கூட்டறிக்கை வெளியிட்டது. எஸ்ஐஆருக்கு 2025 நவம்பர் 2 அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 46 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக ஒருமனதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு எடுக்கப்பட்டது. எஸ்ஐஆர் பணியை உடனடியாகத் திரும்பப் பெற்று 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு போதிய கால அவகாசம் வழங்கி வெளிப்படைத்தன்மை
யுடன் மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2025 நவம்பரில் எஸ்ஐஆருக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 2025 நவம்பர் 11 அன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. 2025 டிசம்பரில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து திமுக, விடுபட்ட மற்றும் முறையற்ற முறையில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணிகளைத் தீவிரப்படுத்த தங்களின் பூத் ஏஜென்ட்டுகளுக்கு அறிவுறுத்தியது.
நாடாளுமன்றத்தில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராகத் தங்களின் கடுமையான எதிர்ப்புக் குரலை திமுக எம்பிக்கள் பதிவு செய்தனர். இப்படி எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு வெட்டவெளிச்சமாக இருந்த போது திமுக எதையும் செய்யவில்லை என கதை கட்டுகிறார்கள். எஸ்ஐஆர் விவகாரத்தில் தவெக என்ன செய்தது? எஸ்ஐஆருக்கு எதிராக திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பங்கேற்கவில்லை. எஸ்ஐஆர் நடவடிக்கையை ஆதரித்த அதிமுக பங்கேற்காமல் போனதில் ஆச்சரியமில்லை. ஆனால், எஸ்ஐஆரை எதிர்ப்பதாக சொன்ன தவெக பங்கேற்காமல் பதுங்கி கொண்ட ஓநாய்கள் எல்லாம், இன்றைக்கு எஸ்ஐஆர்ரை எதிர்ப்பதாக ஓலமிடுகின்றன. ஞானேஷ்குமாரைப் பதவி விலகக் கோரி, அவரைக் கைது செய்து வழக்குத் தொடர வேண்டும் என்று தமிழ்நாட்டில் போராட்டம் நடத்திய போது அவர்களை எல்லாம் இரும்புகரம் கொண்டு ஒடுக்கிய ஓடுகாலிகள், எஸ்ஐஆரை பற்றி பேசுவதற்கும் அதில் திமுகவை குற்றம் சாட்டுவதற்கும் என்ன அருகதை இருக்கிறது?.
டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் கைது செய்யப்பட்ட போது எங்கள் தலைவர் கடுமை
யாக எதிர்த்தார். தமிழ் நாட்டில் போராடியவர்கள் கைது செய்யப்பட்ட போது திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு கரம் நீட்டினார்கள். முதல்வர் விஜய், ராகுல்காந்தியுடன் காபி அருந்திக் கொண்டி
ருந்தார்.
பாஜவும் அவர்களுக்கு வேலை செய்யும் தேர்தல் ஆணையத்திற்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானே
ஷ்குமாருக்கும் கூலிப்பணி செய்கிறவர்கள் தான் விஜய் அமைச்சரவையில் இன்று அமர வைக்கப்பட்டிருக்கி
றார்கள். திமுக எஸ்.ஐ.ஆரைக் கட்டுப்படுத்தி வெற்றிக்காகப் பயன்படுத்தியது என்றால், திமுக ஆட்சியை இழந்தது ஏன்? எஸ்.ஐ.ஆர் டிராமாவை நடத்திவிட்டு அதற்கு திமுகவின் லேபிளை ஒட்ட பார்க்கும் ஓட்டை வாய்களை மக்கள் அடைப்பார்கள். இவ்வாறு அவர் கூறியு
ள்ளார்.