ம.தி.மு.க. பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, வைகோவின் நெச்சுரத்தையும், உறுதியையும் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என்று நமக்கெல்லாம் சந்தேகம் வருகிறதுஎன்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணத்தை வைகோ மேற்கொள்கிறார். 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தன்னுடைய பொது வாழ்க்கையில் தமிழகத்தில் தன் காலடி படாத இடமே இல்லை என்கிற வகையில் நடைபயணம் மேற்கொண்டவர் வைகோ. அவருடைய நெச்சுரத்தையும், உறுதியையும் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என்று நமக்கெல்லாம் ஆச்சரியப்படத் தோன்றுகிறது. போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற அரசு பல்வேறு நடடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் பலனும் கிடைத்து வருகிறது. போதைப் பொருள் பழக்கம் என்பது பெரிய நெட்வொர்க். அந்த நெட்வொர்க்கை அழிக்க மாநிலம், ஒன்றிய அரசு இணைந்து செயல்பட வேண்டும்.
நாட்டுக்குள் ஏராளமான போதை வஸ்துகள் வருகின்றன. அவை எந்தெந்த துறைமுகங்கள் மூலமாக வருகிறதென்று செய்திகளில் பார்க்கிறோம். இந்த நுழைவு வாயில்களை நாம் அடைக்க வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் போதைப் பொருள்கள் கட்டத்தப்படுவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். அதற்கு எல்லா மாநில அரசுகளும் தேவையான ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.