கமுதி, அக். 8-
கமுதி அருகே பசும்பொன் முத்து
ராமலிங்கத்தேவர் குருபூஜை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் சிவகுரு பிரபாகரன், தென் மண்டல ஐ.ஜி.,விஜயேந்திர பிதாரி நேரில் ஆய்வு செய்தனர்.
கமுதி அருகே பசும்பொன் முத்துராம
லிங்கத்தேவர் 119 பிறந்த நாள் விழா, 64வது குருபூஜை விழா அக்.28,29,30ல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில தென் மண்டல ஐ.ஜி.,விஜயேந்திர பிதாரி முன்னிலையில் நேரில் ஆய்வு செய்தனர்.
முக்கிய பிரமுகர்கள், மக்கள் சிரமம் இன்றி வந்து செல்லும் வகையில் புதிதாக ரோடு அமைக்கப்பட்டு வரும் பணியை ஆய்வு செய்தனர். பின் பொதுமக்கள் வந்து செல்லும் பாதைகள், முக்கிய பிரமுகர்கள் வரும் பாதை, ஹெலிபேட் தளம், அன்னதான கூடம், நினைவு மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய போக்குவரத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
டி.ஐ.ஜி., மணிவண்ணன், எஸ்.பி.,சந்தீஷ், கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீநிகம், சப் கலெக்டர் வினோதினி, செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், பி.டி.ஓ.,க்கள் மேகராஜ், சந்திரசேகரன் உட்பட போக்குவரத்துத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இருந்தனர்.