த.வெ.க. தலைவர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பது என்பது சரியே என்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: போலி மருந்து தொழிற்சாலை தொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமியும், வைத்திலிங்கம் எம்.பி.யும் என்மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.
புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பது என்பது என்னை பொருத்தவரை சரியான முடிவு என்று தோன்றுகிறது. ஏனெனில், கரூரில் பெரிய இழப்பு நிகழ்ந்துள்ளது.
புதுச்சேரியில், தமிழகம் போன்ற விரிந்த சாலைகள் கிடையாது. மேலும் த.வெ.க.வினர் அனுமதி கேட்ட சாலையும் மக்கள் நடமாட்டம் அதிகமான சாலை. ஆகவே, விஜய் ரோடு ஷோவை தவிர்த்து, உப்பளம் மைதானம் உள்ளிட்ட எதேனுமொரு இடத்தில் வேண்டுமானால் கூட்டம் நடத்தலாம். அதனை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.