நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய்க்கு தமிழ் சினிமாவில் இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இப்போது அவருக்கு தொடர்ந்து படங்கள் வந்துகொண்டிருந்தாலும் பெற்றி வெற்றி வராமல் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் ரெட்ட தல படத்தில் நடித்திருக்கிறார். அடுத்த வாரம் படம் ரிலீஸாகவிருக்கும் நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். மாற்றுத்திறனாளியாக படம் முழுக்க பேசாமல் சைகையிலேயே பேசி நடித்து அசத்தியிருந்த அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால் வணிக ரீதியான பெரிய வெற்றியை படம் பெறாததால் படக்குழு ரொம்பவே அப்செட்டானது.

இந்த நிலையில் அவர் அந்தப் பேட்டியில், யானை படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிதான். இப்போதும் மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நான் செல்லும் போது யானை படத்தை பற்றி பேசுவார்கள். பாலாவின் இயக்கத்தில் நடித்த வணங்கான் ஒரு நடிகனாக எனக்கு திருப்தி கொடுத்த படம். 20 வருடங்கள் கழித்து பார்த்தாலும் பேசாமலேயே பின்னியிருக்கான் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. ஆனால் அது வணிக ரீதியாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். அது நடக்காமல் போனது வருத்தம்தான் என்றார்.