வட இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு கடும்பனி நிலவும். இதனால் விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. சாலைகளில் எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமானங்கள், ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: மூடுபனி 2 நாட்களுக்கு வட இந்தியா முழுவதும் நிலவும். இதனால் விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கக்கூடும். மூடுபனியின் தீவிரம் படிப்படியாக குறையக்கூடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.