சென்னை, அக். 11-

தமிழக உள்துறை செயலாளர் கார்த்திக் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மறு உத்தரவு வரும் வரை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் பணியை சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.